நாமக்கல் பெரியூர் மருதகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக ஆலோசனை கூட்டம்-அமைச்சர் சக்கரபாணி பங்கேற்பு


நாமக்கல் பெரியூர் மருதகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக ஆலோசனை கூட்டம்-அமைச்சர் சக்கரபாணி பங்கேற்பு
x
தினத்தந்தி 18 April 2023 12:15 AM IST (Updated: 18 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட தும்மங்குறிச்சி பெரியூரில் மருதகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் குறித்து ஆலோசனை செய்வதற்காக, குடிப்பாட்டுக்காரர்களின் மகாசபை கூட்டம் நேற்று கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. கோவில் நிர்வாகக்குழு தலைவரும், பழனி கோவில் அறங்காவலர் குழு தலைவருமான சந்திரமோகன் தலைமை தாங்கினார்.

இதில் தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பெரியூர் மருதகாளியம்மன் கோவில் வரலாற்று சிறப்பு மிக்க கோவிலாக விளங்கி வருகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சிறந்த முறையில் திருப்பணிகள் மற்றும் ராஜகோபுரம் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இன்னும் 10 மாதத்தில் திருப்பணிகள் நிறைவு பெறும். 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம், அதாவது வருகிற தை மாதத்தில் இந்த கோவிலுக்கு பிரம்மாண்டமான முறையில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும். இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். பழனி முருகன் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தை போல் ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவும் நிகழ்வு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மருதகாளியம்மன் கோவில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் திருப்பணிக்குழுவினர் கலந்து கொண்டனர்.


Next Story