தொழிலாளர் தினத்தை முன்னிட்டு 322 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்-கலெக்டர் தகவல்
நாமக்கல்
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 ஊராட்சிகளிலும் வருகிற 1-ந் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஜல்ஜீவன் இயக்கம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Next Story