மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.

சேலம்

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்ரிடம் மனுக்கள் கொடுத்தனர். இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்படுகிறது. பின்னர் அவை அனைத்தும் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீர்வு காணப்படுகிறது.

முதியோர் உதவித்தொகை

அதனடிப்படையில், இன்று (நேற்று) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, குடிநீர், சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 545 மனுக்கள் வரப்பெற்றன. மேலும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 43 மனுக்கள் வரப்பெற்றன. மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

மனு அளித்த சிறிது நேரத்தில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ரூ.2,780 மதிப்புள்ள காதொலிக்கருவி, மற்றொருவருக்கு ரூ.700 மதிப்புள்ள ஊன்றுகோல் ஆகியவை வழங்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீத் பல்வந்த் வாகி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story