கிருஷ்ணகிரி நகராட்சி கூட்டம்
கிருஷ்ணகிரி நகராட்சி கூட்டம் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடந்தது. நகராட்சி தலைவர் பரிதா நவாப் தலைமை தாங்கினார். ஆணையாளர் வசந்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 25-வது வார்டில் தவுலதாபாத் பகுதியில் உள்ள நகராட்சி உருது நடுநிலைப்பள்ளியில் போதிய இடவசதி இல்லாத காரணத்தால் சந்தைப்பேட்டை மார்க்கெட் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கூடுதல் பள்ளி கட்டிடம் கட்ட பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து 33 வார்டுகளில் நிலவும் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் 70-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
இதில் நகராட்சி துணைத்தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, கவுன்சிலர்கள், நகராட்சி உதவி பொறியாளர் அறிவழகன், இளநிலை பொறியாளர் செந்தில்குமரன், துப்புரவு அலுவலர் ராமகிருஷ்ணன், துப்புரவு ஆய்வாளர்கள் ரமணசரண், உதயகுமார், மாதேஸ்வரன், வருவாய் ஆய்வாளர் லூகாஸ், மேலாளர் நாகூர் மீரான் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.