ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம்
ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை(வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை(வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3.30 மணியளவில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மீனவர்கள் மற்றும் மீனவர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுவாக கொடுத்து அது சம்பந்தமாக விவாதிக்கலாம் என்று ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 2 முறை மீனவர் குறைதீர்க்கும் கூட்ட தேதி அறிவிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது 3-வது முறையாக கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story