விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்


விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
x
தினத்தந்தி 11 Jun 2023 12:15 AM IST (Updated: 11 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம்

திருவாடானை,

திருவாடானையில் ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் சினேக வள்ளியம்மன் கோவிலில் நடைபெற்றது. கூட்டத்தில் 2022-23-ம் ஆண்டில் பருவமழை பொய்த்துவிட்டதால் கருகிய நெற்பயிருக்கு கடந்த 5 மாதமாக விவசாயிகள் சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் அரசு இதுவரை வறட்சி நிவாரணம் வழங்கவில்லை. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நெற்பயிருக்கு வறட்சி நிவாரணம் மற்றும் பயிர் காப்பீடு வழங்க வலியுறுத்தி வருகிற ஜூலை 3-ந் தேதி திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு வறட்சி நிவாரணத்தை அரசு அறிவிக்கும் வரை போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் திருவாடானை, ஆர்.எஸ். மங்கலம் வட்டார விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story