போலீஸ் துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்
அரூர்:
அரூர் அருகே உள்ள எஸ்.பட்டி கிராமத்தில் போலீஸ் துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் பாபு தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ், கூட்டத்தில் கலந்து கொண்டு போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி பேசினார். போதை பழக்கத்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதை கருத்தில் கொண்டு படித்த இளைஞர்கள் அதிகம் உள்ள இந்த கிராமத்தில் வளமான எதிர்காலத்திற்கு போட்டித்தேர்வுகளை எழுதுவதில் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். இதன்மூலம் அரசு அதிகாரிகளாக பல்வேறு துறைகளில் பணி வாய்ப்பு பெற முடியும். மேலும். போதை சார்ந்த பழக்கங்கள் உள்ள இளைஞர்கள் அதிலிருந்து விடுபட்டு தங்கள் வாழ்க்கையை ஆக்கபூர்வமாக அமைத்து கொள்ள வேண்டும் என்று இந்த கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.