நாமக்கல் மாவட்டத்தில்5 செயற்பொறியாளர் அலுவலகங்களில் குறைதீர்க்கும் கூட்டம்மேற்பார்வை பொறியாளர் தகவல்


நாமக்கல் மாவட்டத்தில்5 செயற்பொறியாளர் அலுவலகங்களில் குறைதீர்க்கும் கூட்டம்மேற்பார்வை பொறியாளர் தகவல்
x
தினத்தந்தி 1 July 2023 12:30 AM IST (Updated: 1 July 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நாமக்கல் மின்பகிர்மான வட்டத்தின் சார்பில் மாதாந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தை மாவட்டத்தில் உள்ள கோட்ட அலுவலகங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி நாமக்கல், பரமத்திவேலூர், பள்ளிபாளையம், திருச்செங்கோடு மற்றும் ராசிபுரத்தில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகங்களில் குறைதீர்க்கும் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. நாமக்கல்லில் வருகிற 5-ந் தேதியும், பரமத்திவேலூரில் 12-ந் தேதியும், பள்ளிபாளையத்தில் 15-ந் தேதியும், திருச்செங்கோட்டில் 19-ந் தேதியும், ராசிபுரத்தில் 26-ந் தேதியும் காலை 11 மணியளவில் குறைதீர்க்கும் கூட்டங்கள் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

1 More update

Next Story