பிற்படுத்தப்பட்ட வட்டார மேம்பாட்டுக்கான கூட்டம்


பிற்படுத்தப்பட்ட வட்டார மேம்பாட்டுக்கான கூட்டம்
x

கலவையில் பிற்படுத்தப்பட்ட வட்டார மேம்பாட்டுக்கான கூட்டம் நடந்தது.

ராணிப்பேட்டை

கலவையில் மத்திய அரசின் சங்கல்ப் சப்தா திட்டத்தின் மூலம் பின்தங்கிய வட்டார பகுதிகளை அனைத்து துறைகளிலும் முன்னேற்றமடைய செய்யும் நோக்கில் பிற்படுத்தப்பட்ட வட்டார மேம்பாட்டிற்கான கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு திமிரி ஒன்றியக் குழு தலைவர் அசோக் தலைமை தாங்கினார். இதில் அனைத்துத் துறையின் கீழ் செயல்படும் மத்திய, மாநில அரசின் திட்டங்கள் அதன் பயன்கள் குறித்து அந்தந்தத் துறை அலுவலர்கள் எடுத்துக் கூறினர்.

குறிப்பாக மத்திய அரசின் பயிர் காப்பீட்டு திட்டம், இயற்கை விவசாயம், நுண்ணுயிர் பாசன திட்டம், துவரை சாகுபடி மற்றும் பி.எம்.கிசான், தோட்டக்கலைத் துறையில் மாடி தோட்டம் உள்ளிட்ட திட்டங்கள் மற்றும் அதன் மூலம் பெறக்கூடிய மானிய திட்டங்கள் குறித்தும் வேளாண் உதவி இயக்குனர் ராமன் தெரிவித்தார்.

பேரூராட்சி மன்ற தலைவர் கலா சதீஷ் உள்பட அனைத்து துறை அலுவலர்கள், விவசாயிகள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story