வரும் திங்களன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்


வரும் திங்களன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
x

வரும் 10-ம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று தொணடர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு தொடர்ந்து ஊக்கத்தை அளித்து வருகிறார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு சாதகமாக வந்தாலும் உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தாக்கல் செய்த அப்பீல் வழக்கில் நீதிபதிகள் அளித்த உத்தரவு தடையாக உள்ளது.

இந்நிலையில் அக்டோபர் 10-ம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் 10-தேதி மாலை 4.30 மணிக்கு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

கட்சியின் பொதுச் செயலாளர் தேர்தல், 2024 லோக்சபா தேர்தல் கூட்டணி நிலைப்பாடு, திமுக போடும் வழக்குகள், ரெய்டுகளை சமாளிக்க திறமை வாய்ந்த வழக்கறிஞர்கள் குழு அமைத்தல் ஆகிய விஷயங்கள் குறித்து முக்கிய எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.


Related Tags :
Next Story