முன்னாள் ராணுவ வீரர்கள் சந்திப்பு


முன்னாள் ராணுவ வீரர்கள் சந்திப்பு
x

கண்ணமங்கலம் அருகே முன்னாள் ராணுவ வீரர்கள் சந்திப்பு

திருவண்ணாமலை

ஆரணி

கண்ணமங்கலம் அருகே காட்டுக்காநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தென் மண்டல 16-வது மெட்ராஸ் ரெஜிமெண்ட் முன்னாள் ராணுவ வீரர்கள் 6-வது வருடாந்திர சந்திப்பு விழா கேப்டன் நல்லப்பன் தலைமை நடைபெற்றது.

கேப்டன் ஞானசேகரன், கேப்டன் முனிசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுபேதார் வெங்கடேசன் வரவேற்றார்.

விழாவை முன்னாள் ராணுவ வீரர்கள் குடும்ப மகளிர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இதனை தொடர்ந்து பணியிலிருந்த போது நடந்த நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர்.

அப்போது 6-வது மெட்ராஸ் ரெஜிமெண்ட் வீரர்கள் போரில் பங்கேற்று தாய் நாட்டிற்கு செய்த தியாகங்களையும், சாதனைகளையும் நினைவு கூர்ந்தனர்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. முடிவில் சுபேதார் லோகநாதன் நன்றி கூறினார்.

இதில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Related Tags :
Next Story