எடப்பாடி பழனிசாமியுடன்,எஸ்.பி.சண்முகநாதன் சந்திப்பு
எடப்பாடி பழனிசாமியுடன்,எஸ்.பி.சண்முகநாதன் சந்தித்து பேசினார்.
தூத்துக்குடி
அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை சேலம் நெடுஞ்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல், ஒன்றிய செயலாளர்கள் காசிராஜன், செம்பூர் ராஜ்நாராயணன், விஜயகுமார், தூத்துக்குடி மேற்கு பகுதி செயலாளர் முருகன், ஒன்றிய எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் முத்துராமன், பாலஜெயம், ஆனந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story