எடப்பாடி பழனிசாமி தலைமையில் மெகா கூட்டணி


எடப்பாடி பழனிசாமி தலைமையில் மெகா கூட்டணி
x
தினத்தந்தி 9 Nov 2022 12:15 AM IST (Updated: 9 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

கோயம்புத்தூர்

குனியமுத்தூர்

நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

சிறப்பு தொழுகை

கோவையை அடுத்த குனியமுத்தூர் இடையர்பாளையத்தில் உள்ள ஹஜ்ரத் நூர்ஷா அவுலியா தர்காவில் புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இதற்கு அ.தி.மு.க. புறநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார். இதில் அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச் செயலாளராக வேண்டியும், வருகிற நாடாளுமன்ற தேர்தலுடன், சட்ட மன்ற தேர்தலும் நடைபெற வேண்டும் என மக்கள் விரும்பும் நிலையில் மீண்டும் முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என 75 மாவட்டங்களில் 70 தர்காக்களில் ஆன்மிக பயணம் மேற்கொள்கிறேன்.

பாதுகாப்பு கேடயம்

39-வது மாவட்டமாக இன்று (நேற்று) கோவைக்கு வந்துள்ளேன். ஏராளமான தொண்டர்கள் சமய வேறுபாடின்றி இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். உலமாக்க ளுக்கு ஒய்வூதியம் வழங்கிய கட்சி அ.தி.மு.க.

ரமலான், பக்ரீத் ஆகியவற்றிக்கும் மெக்கா செல்லவும், முஸ்லிம் களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கவும் பல உதவிகளை அ.தி.மு.க. செய்து இருக்கிறது.

21 ஆண்டுகள் இப்தார் நோன்பை நடத்தியவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. உலமாக்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை எம்.ஜி.ஆர். கொண்டு வந்தார். அ.தி.மு.க. தான் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு கேடயம்.

கோவைக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 50 ஆண்டு இல்லாத வளர்ச்சியை 5 ஆண்டுகளில் கொடுத்தார். தி.மு.க. ஆட்சியில் இதுவரை ஒரு திட்டம் கூட கொண்டு வரவில்லை.

எங்கு பார்த்தாலும் அடக்குமுறை, வன்முறை, பாலியல் வன்முறை என பாதுகாப்பற்ற நிலை உள்ளது. கோவை சாலைகள் குளங்களை போல காட்சியளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மெகா கூட்டணி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனி சாமி தலைமையில் மெகா கூட்டணி அமையும்.நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.

அதேபோல் சட்டமன்ற தேர்தலிலும் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சராக வருவார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story