சேவல் வைத்து மெகாசூதாட்டம்;6 பேர் கைது


சேவல் வைத்து மெகாசூதாட்டம்;6 பேர் கைது
x
தினத்தந்தி 20 April 2023 12:15 AM IST (Updated: 20 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சேவல் வைத்து மெகாசூதாட்டம்;6 பேர் கைது

கோயம்புத்தூர்

பேரூர்

பேரூர் அருகே சேவல் வைத்து மெகா சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். கார், 30 மோட்டார் சைக்கிள்கள்,4 சேவல், ரொக்கம் ரூ.90 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

சேவல் சூதாட்டம்

பேரூர் அருகே செல்லப்ப கவுண்டன் புதூரில் உள்ள தன்ராஜ் என்பவரது தோட்டத்தில், சட்டவிரோதமாக பணம் வைத்து சேவல் சண்டை சூதாட்டம் நடப்பதாக, பேரூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், போலீசார் அந்த இடத்திற்கு ரோந்து சென்ற போது, அங்கு25-க்கும் மேற்பட்டோர், சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பியோட முயன்றனர்.

6 பேர் கைது

இதில், செல்லப்பகவுண்டன் புதூரைச் சேர்ந்த பிரதீப்குமார் (வயது 37), மத்வராயபுரத்தைச் சேர்ந்த விஜி (26), பிரவீன்குமார் (30), ஸ்ரீதர் (28) மற்றும் மாதம்பட்டியைச் செந்தில்குமார் (50), ஆலாந்துறையைச் சேர்ந்த விஜயகுமார் (39) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், தப்பி ஓடியவர்களின் வாகனங்கள் உட்பட மொத்தம் 30 மோட்டார் சைக்கிள்கள், 4 சேவல், ஒரு கார் மற்றும் 90 ஆயிரத்து 790 ரூபாய் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து, பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story