2,900 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்


2,900 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்
x

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 2,900 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் 21-ந் தேதி நடக்கிறது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களில் 19 லட்சத்து 25 ஆயிரத்து 856 பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். 18 லட்சத்து 30 ஆயிரத்து 435 பேர் 2-ம் தவணையும், 1 லட்சத்து 62 ஆயிரத்து 877 பேர் 3-ம் தவணையும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். ஆனாலும் மாவட்டம் முழுவதும் இதுவரை 2 லட்சத்து 48 ஆயிரம் பேர் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்துவதற்கான காலக்கெடு முடிந்த பிறகும் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர்.

இதேபோல் 12 லட்சத்து 2 ஆயிரம் பேர், 3-ம் தவணை தடுப்பூசி செலுத்தாமல் இருக்கின்றனர். இவர்களுக்காக மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்து 900 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் 21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடக்கிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி பயன் அடைய வேண்டும் என்று கலெக்டர் விசாகன் தெரிவித்தார்.


Next Story