மேகதாது அணை விவகாரம்: கர்நாடகா முதல்-மந்திரிக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
மேகதாது அணை குறித்து பேச தமிழ்நாட்டிற்கு உரிமை இல்லை என சொல்லும் கர்நாடக முதல்-மந்திரிக்கு ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
காவிரி மேலாண்மை வாரியத்தில், மேகதாது அணை கட்டுதல் குறித்து விவாதிப்பதை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
மேலும் மேகதாது அணை குறித்து பேச தமிழ்நாட்டிற்கு உரிமை இல்லை என சொல்லும் கர்நாடகாவிற்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு உரிமையில்லை என்ற கர்நாடக முதல்-மந்திரியின் கூற்று சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பிற்கு எதிரானது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story