மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவில் திருவிழா


மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவில் திருவிழா
x

மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

புதுக்கோட்டை

விராலிமலையில் மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த மாதம் 25-ந் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதையடுத்து கடந்த 2-ந் தேதி சித்திரை திருவிழா அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து பல்ேவறு பூஜைகள் நடைபெற்று வந்தன. தொடர்ந்து நேற்று மலங்குளம், கருப்பர்கோவில், சத்குரு சம்ஹாரமூர்த்தி கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதையடுத்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (புதன்கிழமை) அம்மனுக்கு மாவிளக்கு வைத்தல், பொங்கல் வைத்தும், கிடாய் வெட்டியும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். மாலை படுகளம் நிகழ்ச்சி நடக்கிறது. அதில் பல்வேறு ஊர்களிலிருந்து பக்தர்கள் நீண்ட மூங்கில் கழிகளில் ஈட்டிகளை மாட்டி முருகன் கோவில் வாசலில் இருந்து வெட்டப்பட்ட ஆட்டின் தலையினை ஈட்டிகளில் குத்தி படுகளம் என்ற விளையாட்டை விளையாடியபடி அம்மன் கோவிலை வந்தடைந்து சாமி தரிசனம் செய்வார்கள். நாளை (வியாழக்கிழமை) விடையாத்தியுடன் திருவிழாவானது நிறைவடைகிறது.


Next Story