மேலத்தானியம் முத்துமாரியம்மன் வீதியுலா; தேரோட்டம் நாளை நடக்கிறது


மேலத்தானியம் முத்துமாரியம்மன் வீதியுலா; தேரோட்டம் நாளை நடக்கிறது
x

காரையூர் அருகேமேலத்தானியம் முத்துமாரியம்மன் வீதியுலா நடைபெற்றது. தேரோட்டம் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது.

புதுக்கோட்டை

காரையூர் அருகே மேலத்தானியத்தில் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதையொட்டி கடந்த 2-ந் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. அதனை தொடர்ந்து மண்டகப்படிதாரர்கள் சார்பில் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. நேற்று எம்.உசிலம்பட்டி கிராமத்தார் சார்பில் முத்து மாரியம்மன் ேதர் வடிவிலான சப்பரத்தில் எழுந்தருள செய்தனர். பின்னர் மேள தாளத்துடன் வாண வேடிக்கையுடன் வீதிஉலா நடைபெற்றது. பின்னர் முத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) பால்குடம், பொங்கல் விழாவும், நாளை (திங்கட்கிழமை) தேரோட்டமும் நடைபெறுகிறது. தேர் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை மேலத்தானியம் எட்டுப்பட்டி கிராமத்தார்கள் செய்து வருகின்றனர்.


Next Story