120 விநாயகர் சிலைகள் கரைப்பு


120 விநாயகர் சிலைகள் கரைப்பு
x

120 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது.

அரியலூர்

மீன்சுருட்டி:

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகள், உடையார்பாளையம், ஆண்டிமடம், மீன்சுருட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அந்த சிலைகளை கரைப்பதற்காக ஊர்வலமாக ெகாண்டு சென்றனர். இதில் அந்த பகுதிகளில் உள்ள சிலைகள் மற்றும் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் மற்றும் காட்டுமன்னார்கோவில் பகுதியில் இருந்தும் விநாயகர் சிலைகள் ஆகியவை நேற்று முன்தினம் அணைக்கரை கீழணை கொள்ளிடம் ஆற்றில் கரைக்கப்பட்டது. இதில் நேற்று முன்தினம் மதியம் முதல் இரவு வரை சுமார் 120-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கொள்ளிடம் ஆற்றில் கரைக்கப்பட்டுள்ளது. பெரிய விநாயகர் சிலைகளை கிரேன் மூலம் தூக்கப்பட்டு, ஆற்றில் கரைக்கப்பட்டது. இதையொட்டி ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கலைகதிரவன் தலைமையில் மீன்சுருட்டி இன்ஸ்பெக்டர் பெரியசாமி முன்னிலையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story