பாலக்கோட்டில்அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்


பாலக்கோட்டில்அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 31 May 2023 10:30 AM IST (Updated: 31 May 2023 10:33 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாலக்கோடு

பாலக்கோடு அண்ணா நகரில் வார்டு 12,13,16,17 ஆகிய வார்டுகளில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் நடைபெற்றது. நகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கோபால், முன்னாள் ஒன்றிய செயலாளர் ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கட்சி தொண்டர்களிடம் பூர்த்தி செய்யப்பட்ட உறுப்பினர் படிவங்களை பெற்றார்.

பின்னர் அவர் பேசுகையில், மாவட்டத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் 65 ஆயிரம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். தொண்டர்கள் புதிய உத்வேகத்துடன் பழைய உறுப்பினர்களை புதுப்பிக்கவும், புதிதாக உறுப்பினர்களை சேர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நகர செயலாளர் சங்கர், கூட்டுறவு சங்க தலைவர்கள் புதூர் சுப்ரமணி, பாலகிருஷ்ணன், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் கோவிந்தசாமி, கிளை செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் கிளை செயலாளர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story