குறைதீர்வு கூட்டத்திற்கு வராத போலீஸ் அதிகாரிகளுக்கு 'மெமோ'
குறைதீர்வு கூட்டத்திற்கு வராத போலீஸ் அதிகாரிகளுக்கு ‘மெமோ’ வழக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
மெமோ
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்️ மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கூடுதல்️ போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன், கோட்டீஸ்வரன் ஆகியோர் தலைமை தாங்கினர். கூடுதல்️ போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் முந்தைய கூட்டத்திற்கு வந்தவர்கள் மீண்டும் வந்தார்கள் எனில்️ சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் அல்️லது சப்- இன்ஸ்பெக்டர் கண்டி️ப்பாக வரவேண்டும் எனக்கூறி, வராதவர்கள் மீது நடவடி️க்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். மேலும் அவர்களுக்கு மெமொ கொடுக்கவும் உத்தரவிட்டார்.
கூட்டத்தில்️ வேலூரை சேர்ந்த கோபி கிருஷ்ணா என்பவர் அளித்த மனுவில்️ தான் நடத்தி வந்த கடையில் வரவு செலவு பார்த்த உறவினர்கள் ரூ.65 லட்சம் வரை மோசடி️ செய்து விட்டனர். அது குறித்து கேட்டால் அரசியல்️ பிரமுகருடன் சேர்ந்து கொலை மிரட்டல்️ விடுக்கின்றனர். அவர்கள் மீது நடவடி️க்கை எடுத்து பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்று கூறியிருந்தார்.
பாதுகாப்பு வேண்டி️ பெண் வக்கீல்️ மனு
அணைக்கட்டை சேர்ந்த வக்கீல்️ சித்ரா அளித்துள்ள மனுவில்️ என்னை 2 மாதங்களுக்கு முன்னர் சிலர் கொலை செய்ய முயற்சித்தனர். அது குறித்து விரிஞ்சிபுரம் போலீஸ் நிலையத்தில்️ புகார் அளித்தேன். ஆனால்️ நடவடி️க்கை எடுக்கவில்️லை. பின்னர் மாவட்ட நீதிபதியிடம் மனு அளித்து அவரின் உத்தரவின் பேரில்️ போலீஸ் சூப்பிரண்டி️டம் மனு அளித்துள்ளேள். எனவே உயிருக்கு அச்சுறுத்தல்️ உள்ளதால்️ எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறியிருந்தார். மனுவை பெற்றுக் கொண்ட கூடுதல்️ போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
பெண் புகார்
சோழவரம் பகுதியை சேர்ந்த சுமதி அளித்துள்ள மனுவில்️ எனக்கு 3 குழந்தைகள் உள்ளனர். நான் கூலி வேலை செய்து வருகிறேன். இந்த நிலையில்️ என் கணவர் 2-வது திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து மகளிர் போலீஸ்️ நிலையத்தில்️ புகார் அளித்தேன். ஆனால்️ சரியான நடவடி️க்கை எடுக்கவில்️லை. எனவே இது தொடர்பாக நடவடி️க்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
மேலும் புகார் அளிக்க சென்ற போது அவர்கள் சாப்பாடு வாங்கி வரும்படி கூறியதாக தெரிவித்தார். அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் உடனடி️யாக தன்னை சந்திக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன் உத்தரவிட்டார்.