சுப்பிரமணிய சிவா நினைவு நாள் அனுசரிப்பு


சுப்பிரமணிய சிவா நினைவு நாள் அனுசரிப்பு
x

பாப்பாரப்பட்டியில் சுப்பிரமணிய சிவா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் கலெக்டர் சாந்தி கலந்து கொண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

தர்மபுரி

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டியில் சுப்பிரமணிய சிவா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் கலெக்டர் சாந்தி கலந்து கொண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

நினைவு நாள்

பாப்பாரப்பட்டியில் தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் சாந்தி கலந்து கொண்டு மலர்மாலை வைத்தும், உருவப்படத்துக்கு மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் தமிழறிஞர்களின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சியை கலெக்டர் பார்வையிட்டார். இதில் உதவி கலெக்டர் சித்ரா விஜயன் முன்னாள் எம்.எல்.ஏ. இன்பசேகரன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் யசோதா, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், குட்டி, பென்னாகரம் ஒன்றியக்குழு கவிதா ராமகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர்கள் மாதேஷ், பூங்கொடி, பேரூராட்சி தலைவர் பிருந்தா, துணைத்தலைவர் மல்லிகா, ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஜி.கே.மணி எம்.எல்.ஏ.

இதனை தொடர்ந்து பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. தலைமையில் பா.ம.க.வினர் சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

உடன் மாநிலத்துணை தலைவர் பாடி செல்வம், மாவட்ட தலைவர் செல்வகுமார், மாநில இளைஞரணி துணை செயலாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் சிவம், ஊராட்சி மன்ற தலைவர் சேது முருகன் கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story