நீத்தார் நினைவு தினம்
கமுதி தீயணைப்பு நிலைய அலுவலக வளாகத்தில் நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
ராமநாதபுரம்
கமுதி,
கமுதி தீயணைப்பு நிலைய அலுவலக வளாகத்தில் நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மும்பை துறைமுகத்தில் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் தீயணைக்கும் பணியின்போது உயிர்நீத்த 66 தீயணைப்பு வீரர்கள் நினைவாக, இந்த நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. கமுதி தீயணைப்பு நிலைய அலுவலர்கள் சந்திர சேகரன், பார்த்திபன் தலைமை தாங்கினர். இன்ஸ்பெக்டர் விமலா, சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ், பேரூராட்சி தலைவர் அப்துல்வஹாப் சஹாராணி மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்துகொண்டு நினைவு ஸ்தூபிக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதையொட்டி தீ தொண்டு வாரம் ஒரு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனை, பஸ் நிலையம் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் தீ தடுப்பு குறித்து செயல் விளக்கம் அளிக்கப்படும் என நிலைய அலுவலர் கூறினார்.
Related Tags :
Next Story