ராஜீவ் காந்தி நினைவு நாள் அனுசரிப்பு


ராஜீவ் காந்தி நினைவு நாள் அனுசரிப்பு
x
தினத்தந்தி 23 May 2023 11:00 AM IST (Updated: 23 May 2023 11:04 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ் காந்தி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

தர்மபுரி

தர்மபுரி

தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ்காந்தி உருவப்படத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் தீர்த்தராமன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அவரது தலைமையில் பயங்கரவாத எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் வடிவேல், பொதுக்குழு உறுப்பினர்கள் நரேந்திரன், ஜெயசங்கர், கிருஷ்ணன், மகளிர் அணி மாவட்ட தலைவர் காளியம்மாள், நகர தலைவர் வேடியப்பன், வட்டார தலைவர்கள் காமராஜ், ஞானசேகர். ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட தலைவர் சிவலிங்கம் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதேபோன்று மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ்காந்தி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.


Next Story