எம்.ஜி.ஆரின் நினைவு தினம்
நாமக்கல் மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
எம்.ஜி.ஆர். நினைவு தினம்
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தையொட்டி பள்ளிபாளையம் நகர ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு முன்னாள் நகராட்சி தலைவரும் நகர அ.தி.மு.க. செயலாளருமான வெள்ளியங்கிரி தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தில் முன்னிலை வகித்தார். வடக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன் வரவேற்றார். தொகுதி செயலாளர் சுப்பிரமணி மவுன ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலம் ஒட்டமெத்தைரோடு, ஆர்.எஸ்.ரோடு., பாலம்ரோடு, ஆவரங்காடு சனி சந்தை ரோடு வழியாக சென்று எம்.ஜி.ஆர். சிலையை அடைந்தது. அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் நகரத் துணைச் செயலாளர் ஜெய் கணேஷ், நகர பொருளாளர் சிவகுமார், நகராட்சி கவுன்சிலர்கள் ஜெயா வைத்தி, சுஜாதா மாரிமுத்து, சரவணன், தொழில் பிரிவு நிர்வாகிகள் சரவணன், ராஜ்குமார், சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் சிங்காரவேலு, களியனூர் ரவி, புதுப்பாளையம் ரவி, சமய சங்கிலி முருகேசன், மீனவர் அணி நிர்வாகி ஆறுச்சாமி, அவைத்தலைவர் மாரப்பன், பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணி, ஒன்றிய கிளை நிர்வாகிகள், நகரக் கிளை நிர்வாகிகள், பாசறை நிர்வாகிகள், எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகள் முருகேசன், முஸ்தபா மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.
திருச்செங்கோடு
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும் அ.தி.மு.க. நிறுவன தலைவருமான எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு நாளையொட்டி திருச்செங்கோடு நகர அ.தி.மு.க. சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக நகர செயலாளர் அங்கமுத்து தலைமையில் அமைதி ஊர்வலம் நடந்தது. நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன் சரஸ்வதி, மாவட்ட துணைச் செயலாளர் முருகேசன், மாவட்ட வக்கீல் அணி பொருளாளர் வக்கீல் பரணிதரன், வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ஆர்.எம்.டி.சந்திரசேகர், தெற்கு ஒன்றிய செயலாளர் அணி மூர் மோகன், எலச்சிபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செல்லப்பன், நகரத் துணைச் செயலாளர் நகர் மன்ற உறுப்பினர் ராஜவேல், நகர மன்ற உறுப்பினர்கள் மல்லிகா ராஜா, முன்னாள் தொகுதி செயலாளர் சபரி தங்கவேல், இணைச்செயலாளர் முரளிதரன், நகர அம்மா பேரவை செயலாளர் நகர் மன்ற உறுப்பினர் கார்த்திகேயன், நகர வங்கி தலைவர் ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். பழைய பஸ் நிலையம் அருகில் இருந்து தொடங்கி நான்கு ரத வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம் அண்ணா சிலை அருகே நிறைவடைந்தது. அங்கே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன் சரஸ்வதி உள்ளிட்ட அ.தி.மு.க. பிரமுகர்கள் அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
சேந்தமங்கலம்
சேந்தமங்கலம் அருகே உள்ள துத்திக்குளம் எம்.ஜி.ஆர். சிலை திடலில் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர் நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சேந்தமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் ஜி.பி.ரமேஷ் தலைமை தாங்கினார். இதையடுத்து எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து அ.தி.மு.க.வினர் அனைவரும் வணங்கினர். சேந்தமங்கலம் ஒன்றிய அக்ரோ தலைவர் ராமசாமி, எம்.ஜி.ஆர். மன்ற ஒன்றிய செயலாளர் சோமசுந்தரம், கிளைக் கழக செயலாளர் பொன்னுசாமி, பிரதிநிதிகள் பன்னீர்செல்வம், வாழவந்தி கோம்பை சத்யா, ஒன்றிய பாசறை அணி செயலாளர் மேரி பாஸ்கரன் உள்பட திரளான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். அதேபோல் காளப்பநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தத்தில் பேரூர் அ.தி.மு.க. சார்பில் நடந்த எம்.ஜி.ஆர். நினைவு நாள் நிகழ்ச்சியில் பேரூர் செயலாளர் ராஜா முன்னிலையில் அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
நாமகிரிப்பேட்டை
நாமகிரிப்பேட்டையில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவுநாள் ஆர்.புதுப்பட்டி பேரூர் கழக சார்பில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நாமகிரிப்பேட்டை மேற்கு ஒன்றிய முன்னாள் செயலாளரும், முன்னாள் பேரூராட்சி தலைவருமான எல்.எஸ்.மணி தலைமையில், பேரூர் கழக செயலாளர் மணிகண்டன் ஆகியோர் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் மகளிர் அணி, இளைஞர் அணி உள்பட கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.
ராசிபுரம்
அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல் அமைச்சருமான எம்.ஜி.ஆரின் நினைவு தினம் நாமகிரிப்பேட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி மெட்டாலாவில் நடந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. நாமகிரிப்பேட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கே.பி.எஸ்.சரவணன் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. கலாவதி, நாமகிரிப்பேட்டை ஒன்றிய குழு தலைவர் ராஜேந்திரன், பேரூர் செயலாளர் மணிகண்டன் மற்றும் செந்தில்குமார் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அதேபோல் நாமகிரிப்பேட்டை, முள்ளுகுறிச்சி ஆகிய இடங்களிலும் எம்.ஜி.ஆர். நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
எருமப்பட்டி
எருமப்பட்டி பழனிநகரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு எம்.ஜி.ஆரின் நினைவுநாளையொட்டி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு எருமப்பட்டி அ.தி.மு.க. நகர செயலாளர் பாலுசாமி தலைமை தாங்கினார். தொடர்ந்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் அ.தி.மு.க. நகர நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் உள்பட கட்சியினர் கலந்து கொண்டனர்.