மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரர்கள் பொதுமக்களை கடித்ததால் பரபரப்பு
மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரர்கள் பொதுமக்களை கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பொன்னமராவதி அருகே இந்திரா நகரை சேர்ந்தவர்கள் ராமு, அய்யாசாமி. சகோதரர்களான இவர்கள் இருவரும் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் லட்சுமணன் என்பவர் நடத்தி வரும் அடகு கடையில் நகையை அடகு வைத்துள்ளனர். இந்நிலையில், அடகு வைத்த அந்த நகையை மீட்க சென்றுள்ளனர். அப்போது, லட்சுமணன் இரவு ஆகிவிட்டதால் நாளை நகையை தருவதாக கூறியுள்ளார். இதனால் பொன்னமராவதி பஸ் நிலையத்தில் 3 பேருக்கும் இடைேய தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராமு, அய்யாசாமி ஆகிய இருவரும் லட்சுமணனை கடித்து வைத்துள்ளனர். தடுக்க வந்த அக்கம் பக்கத்தினரையும் இருவரும் சேர்ந்து சரமாரியாக கடித்து வைத்துள்ளனர். இதில் லட்சுமணன், சாகுல் ஹமீது, இளவரசன், சரவணன், ராஜேந்திரன் ஆகிய 5 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மனநலம் பாதிக்கப்பட்ட இருவரையும் புதுக்கோட்டை அரசு மனநலம் பாதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.