மனநலம் பாதித்த பெண் பாலியல் பலாத்காரம்

மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
பெண் பலாத்காரம்
கோவையை சேர்ந்த மனநலம் பாதித்த 22 வயது பெண் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை அந்த பெண்ணை காணவில்லை. இதனால் குடும்பத்தினர் பல இடங்களில் தேடி அலைந்தனர். அப்போது அங்குள்ள ஒரு சாலையோரத்தில் அந்த பெண் அரைகுறை ஆடையுடன் காணப்பட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அந்த பெண்ணை மீட்டு விசாரித்தனர். இதில் அந்த பெண்ணை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இது குறித்து அந்த பெண் ணின் உறவினர்கள், கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
ஆட்டோ டிரைவர் கைது
அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் ணை பாலியல் பலாத்காரம் செய்தது, அந்த பகுதியை சேர்ந்த சரக்கு ஆட்டோ டிரைவர் வரதராஜ் (வயது 22) என்பது தெரியவந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்தனர்.
கைதான வரதராஜூக்கு திருமணமாகி 7 வயதில் மகன் உள்ளார். அவரது மனைவி பண்டிகை விடுமுறைக்காக சொந்த ஊரான ராமநாதபுரத்திற்கு சென்றது தெரிய வந்தது. கைதான வரதராஜை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






