வியாபாரி வெட்டிக்கொலை
பனவடலிசத்திரம் அருகே, வியாபாரி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மர்ம நபர்கள் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டனர்.
பனவடலிசத்திரம்:
பனவடலிசத்திரம் அருகே, வியாபாரி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மர்ம நபர்கள் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டனர்.
இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
வியாபாரி
தென்காசி மாவட்டம் பனவடலிசத்திரம் அருகே உள்ள தெற்கு பனவடலிசத்திரத்தை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 40).
இவர் கேரள மாநிலம் திருச்சூரில் இரும்பு வியாபாரம் செய்து வந்தார். தெற்கு பனவடலிசத்திரத்தில் கோவில் கொடை விழா நடந்தது. இதற்காக மணிகண்டன் வந்திருந்தார்.
வெட்டிக்கொலை
நேற்று மாலை மணிகண்டன் பனவடலிசத்திரம் அருேக உள்ள மதுக்கடை பக்கத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் மணிகண்டனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பனவடலிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வெறிச்செயலில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். கொலைக்கான காரணம் என்ன? என்பது பற்றியும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.