வியாபாரிகள் சங்கத்தினர் உண்ணாவிரதம்


வியாபாரிகள் சங்கத்தினர் உண்ணாவிரதம்
x

வியாபாரிகள் சங்கத்தினர் உண்ணாவிரதம்

திருப்பூர்

அவினாசி

அவினாசி புதிய பஸ் நிலையம் முதல் சேவூர் ரோடு சிந்தாமணி பஸ் நிறுத்தம் வரை ரோட்டோர கடைகள் நாளுக்கு நாள் பெருகிவருவதாகவும். இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு அடிக்கடி விபத்துகள் நேரிடுகிறது. எனவே ரோட்டோர கடைகளுக்கு தனியாக மாற்று இடம் ஒதுக்க வேண்டும் என்று அவினாசி அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் வலியுறுத்தி வந்தனர். எனவே கடந்த மாதம் இது குறித்து பேரூராட்சி மன்ற கூட்ட அரங்கில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள், வியாபாரிகள், ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தினர் கலந்துகொண்டனர். இதில் சாலை ஓரம் கடைகளை அக்டோபர் 1-ந் தேதி முதல் அவினாசியில் உளள வாரச்சந்தைக்கு மாற்றுவது என மன்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏ.ஜ.டி.யு.சி. சங்கத்தினர் கடந்த 30-ந் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர் இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் சாலை ஒர கடைகள் செயல்பட்டன.

எனவே ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தினரை கண்டித்து அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் அவினாசி அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் முத்துகுமரன் தலைமையில், ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மார்க்கெட் சங்க தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில் நேற்று அவினாசி புதிய பஸ் நிலையம் அருகில, உண்ணாவிரத போராட்டம் தொடங்கினர். இது பற்றி தகவலறிந்த அவினாசி போலீசார் உண்ணாவிரதம் இருந்தவர்களிடம் நாளை சப்-கலெக்டா இங்கு வந்து ஆய்வு மேற்கொண்டு பிரச்சினைக்கு தீர்வு காண உள்ளார். எனவே உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுமாறு சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். எனவே வியாபாரிகள் சங்கத்தினர் காலை 10.30 மணியளவில் முன்னாள் போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.

-------------

1 More update

Next Story