வணிகர் சங்க கூட்டம்
பாவூா்சத்திரத்தில் வணிகர் சங்க கூட்டம் நடந்தது.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் வணிகர்கள் சங்கம் சார்பில் சங்க அமைப்பாளர் ஆர்.கே.காளிதாசன் தலைமையில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. அதில் பாவூர்சத்திரம் நகர எல்லைக்குள் நடைபெறும் சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பால பணிகளை விரைவுபடுத்திடவும், ரெயில்வே கேட்டில் இருந்து பாலம் முடியும் வரை இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்கவும், மழை நீர் வடிகால் உயரத்தை தாழ்த்தி அமைத்திடவும் சாலை விரிவாக்க பணி ஒப்பந்ததாரர்களை வணிகர் சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த கோரிக்கைகளை 2 வார காலத்திற்குள் நிறைவேற்றித்தர வேண்டும் எனவும், இல்லையெனில் முழு கடையடைப்பு மற்றும் சாலை மறியல் நடத்திடவும் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் வணிகர் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் விஜய்சிங்ராஜ், பொருளாளர் ஆரோக்யராஜ் மற்றும் செல்வராஜ், பூபால் பாண்டியன், குலசேகரப்பட்டி பஞ்சாயத்து தலைவரின் கணவர் மதிச்செல்வன், கல்லூரணி பஞ்சாயத்து தலைவர் ராஜ்குமார், அம்பிகா செல்வன், முத்தரசன், அழகேசன், அருணோதயம், பிச்சையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.