வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்க கூட்டம்


வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்க கூட்டம்
x

நெல்லையில் வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்க கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் முகமது யூசுப் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் நாராயணன், முகமது ஹனீபா, கான் முகமது, சம்சுதீன், துணை செயலாளர்கள் செய்யது அலி, ஆதிமூலம், ஜவஹர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் ஆனிப்பெருந்திருவிழா தேரோட்டம் 11-ந்தேதி நடைபெற இருப்பதால் அனைத்து வணிகர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். போலீசார் போதிய பாதுகாப்பு வழங்குவதுடன், தேர் ஒரே நாளில் நிலையம் சேருவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். அதனை கல்வித்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். கல்லணை தொடக்கப்பள்ளியில் தேவையான இட வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். டவுன் காட்சி மண்டபம் அருகே பேட்டை செல்லும் ரோடு மிக மோசமான நிலையில் உள்ளது. அதனை சீரமைத்து கொடுக்க வேண்டும். தென்காசி 4 வழிச்சாலை பணியை விரைவுப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக செயலாளர் ரவிக்குமார் வரவேற்றார். முடிவில் துணை செயலாளர் ஜவஹர் நன்றி கூறினார்.


Next Story