அளவுக்கு அதிகமாக மது குடித்த மேஸ்திரி சாவு


அளவுக்கு அதிகமாக மது குடித்த மேஸ்திரி சாவு
x

கலவை அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்த மேஸ்திரி பலியானார்.

ராணிப்பேட்டை

கலவையை அடுத்த சென்ன சமுத்திரம் கிராமத்தில் ரோட்டு தெருவில் வசித்தவர் மணிகண்டன். மேஸ்திரி வேலை செய்து வந்தார். குடிபழக்கத்துக்கு அடிமையான அவர் கடந்த இரண்டு நாட்களாக வீட்டில் தொடர்ந்து குடித்துள்ளார். அப்போது ஆகாரம் எதுவும் சாப்பிடாமல் இருந்துள்ளார். இதனை மனைவி சிந்து கண்டித்துள்ளார். ஆனால் கதவை பூட்டிக்கொண்டு தொடர்ந்து குடித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று திடீரென மயக்க நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அவரை கலவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சென்ற சிறிது நேரத்தில் இறந்துவிட்டார்.

இதுகுறித்து கலவை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story