மெட்ரோ ரெயில் பணி: மாம்பலத்தில் நாளை முதல் ஒரு வாரம் போக்குவரத்து மாற்றம்


மெட்ரோ ரெயில் பணி: மாம்பலத்தில் நாளை முதல் ஒரு வாரம் போக்குவரத்து மாற்றம்
x

மெட்ரோ ரெயில் பணி காரணமாக மாம்பலத்தில் நாளை முதல் ஒரு வாரம் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

மெட்ரோ ரெயில் பணிக்காக மாம்பலம் பிரதான சாலையில் தியாகராய கிராமனி சாலை சந்திப்பு முதல் அபிபுல்லா சாலை சந்திப்பு வரை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தியாகராய சாலை, அபிபுல்லா சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 25-ந்தேதி (நாளை) முதல் 31-ந்தேதி வரை ஒரு வாரத்துக்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

* மாம்பலம் சாலையில் தியாகராய கிராமனி சாலை சந்திப்பு முதல் அபிபுல்லா சாலை சந்திப்பு வரை போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.

* மாம்பலம் பிரதான சாலையில் இருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் பக்கம் செல்ல விரும்பும் இலகு ரக வாகனங்கள் தியாகராய கிராமனி சாலை சந்திப்பில் தடை செய்யப்பட்டு தியாகராய சாலை, வடக்கு உஸ்மான் சாலை மற்றும் அபிபுல்லா சாலை வழியாகவும் செல்லலாம்.

* மாம்பலம் பிரதான சாலையில் கோடம்பாக்கம் மேம்பாலம் பக்கத்தில் இருந்து தியாகராயநகர் பக்கம் செல்ல விரும்பும் இலகு ரக வாகனங்கள் அபிபுல்லா சாலை மற்றும் வடக்கு உஸ்மான் சாலை வழியாகவும் செல்லலாம்.

இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைக்கவேண்டும்.

மேற்கண்ட தகவல் போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story