மெட்ரோ ரெயில் பணி: மாம்பலம் பிரதான சாலையில், நாளை முதல் அடுத்த ஆண்டு வரை போக்குவரத்து மாற்றம்


மெட்ரோ ரெயில் பணி: மாம்பலம் பிரதான சாலையில், நாளை முதல் அடுத்த ஆண்டு வரை போக்குவரத்து மாற்றம்
x

சென்னை மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக மாம்பலம் பிரதான சாலையில், நாளை முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

சென்னை,

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

சென்னை மாம்பலம் பிரதான சாலை (கோடம்பாக்கம் மெட்ரோ நிலையம்) Chennai metro Rail limited - ஆல் மேற்கொள்ளப்பட உள்ள கட்டுமான பணிகளை கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ பணிகளை செய்ய வசதியாக போக்குவரத்து மாற்றங்கள் திட்டமிட்டு கடந்த 25.12.2022 முதல் ஒரு வார காலத்திற்கு சோதனை ஓட்டம் செயல்பட்டதால் Chennai metro Rail limited கோரியபடி இந்த போக்குவரத்து மாற்றங்கள் (9.01.2023 முதல் 07.04.2024) வரை மேலும் 15 மாதங்கள் நீட்டிக்கப்படுகிறது.

* மாம்பல பிரதான சாலையில் தியாகராய கிராமனி சாலை சந்திப்பு முதல் ஹபிபுல்லா சாலை சந்திப்பு வரை போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.வழியாகவும் செல்லலாம்.

* மாம்பல பிரதான சாலையில் இருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் பக்கம் செல்ல விரும்பும் இலகு ரக வாகனங்கள் தியாகராய கிராமனி சாலை சந்திப்பில் தடை செய்யப்பட்டு, மேற்கண்ட வாகனங்கள் தியாகராய சாலை, வடக்கு உஸ்மான் சாலை மற்றும் ஹபிபுல்லா சாலை வழியாகவும் செல்லலாம்.

* மாம்பல பிரதான சாலையில் கோடம்பாக்கம் மேம்பாலம் பக்கத்திலிருந்து தி.நகர் பக்கம் செல்ல விரும்பும் இலகு ரக வாகங்கள், ஹபிபுல்லா சாலை சந்திப்பில் தடை செய்யப்பட்டு ஹபிபுல்லா சாலை மற்றும் வடக்கு உஸ்மான் சாலை வழியாக செல்லலாம்.

இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story