ரூ.14.28 கோடியில் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையம் புதுப்பொலிவு பெறுகிறது.


ரூ.14.28 கோடியில் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையம் புதுப்பொலிவு பெறுகிறது.
x
தினத்தந்தி 10 Sept 2023 12:45 AM IST (Updated: 10 Sept 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.14.28 கோடியில் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையம் புதுப்பொலிவு பெறுகிறது.

கோயம்புத்தூர்


மேட்டுப்பாளையம்


அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.14.28 கோடியில் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையம் புதுப்பொலிவு பெறுகிறது.


மேட்டுப்பாளையம் ரெயில் நிலையம்


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையம் கடந்த 1873-ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் பயன்பாட்டிற்கு வந்தது. 31.8.1873-ம் ஆண்டு முதன் முதலாக மேட்டுப்பாளையம் - கோவை இடையே பயணிகள் ரெயில் இயக்கப்பட்டது.


அதைத் தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் இருந்து சென் னைக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலும், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு 2005-ம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்த மலை ரெயிலும் இயக்கப்பட்டு வருகிறது.


மாதிரி புகைப்படம்


இந்த நிலையில் 150 ஆண்டு பழமை வாய்ந்த மேட்டுப்பாளை யம் ரெயில் நிலையம் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.14.28 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்டு புது பொலிவுடன் அழகு படுத்தப்பட உள்ளது. இதன் மாதிரி புகைப்படம் ரெயில் நிலையத்தில் வைக்கப்பட்டு உள்ளது.


அதில் பிரதான நுழைவு வாயில், முன்பதிவு அலுவலகங்கள், பயணிகள் காத்திருப்பு கூடம் ஆகியவை கட்டப்பட உள்ளது ரெயில் பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் ரெயில்கள் நிற்கும் இடங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட உள்ளது.


நவீன வசதிகள்


ரெயில் நிலைய வளாகத்தில் நடைமேடை மேம்படுத்தப்பட்டு கூடுதலாக நடைமேடை, நிழற்கூரைகள், கழிப்பறைகள், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள், லிப்ட், எஸ்கலேட்டர், கண்கா ணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட நவீன வசதிகளும் ஏற்படுத்தப் பட உள்ளது.


மேலும் அங்கு மின் சிக்கனத்தை கடைபிடிக்க எல்.இ.டி. விளக்குகள், பயணிகளுக்கு தூய்மையான குடிநீர் வழங்க தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளது. இது போல் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் செய்யப் படும் மேம்பாட்டு பணிகள் குறித்து தென்னக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


150 ஆண்டு பாரம்பரியம் கொண்ட மேட்டுப்பாளையம் ரெயில் நிலையம் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் புது பொலிவு பெறு வது ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சி யை ஏற்படுத்தி உள்ளது.


Next Story