மேட்டுப்பாளையம் - உதகை மலை ரெயில் சேவை நாளை முதல் மீண்டும் இயக்கப்படும் - தென்னக ரெயில்வே
மேட்டுப்பாளையம் - உதகை மலை ரெயில் சேவை நாளை முதல் இயக்கப்படும்
நீலகிரி,
நீலகிரி மாவட்டங்களில் கடந்த 13-ந் தேதி நள்ளிரவு பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் கல்லாறு-ஹில்குரோவ் இடையே மலை ரெயில் பாதையில் 10க்கு மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதுடன், தண்டவாளத்தில் ராட்சத பாறைகளும் விழுந்தன.
இதையடுத்து தென்னக ரெயில்வே நிர்வாகம் மேட்டுப்பாளையம் - உதகை மலை ரெயில் சேவை ரத்து செயப்பட்டதுரெயில் பாதையில் விழுந்துள்ள பாறை, மண்குவியலை அகற்றும் பணி தொடர்வதால் மலை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்தது.
இந்த நிலையில் மேட்டுப்பாளையம் - உதகை மலை ரெயில் சேவை நாளை முதல் இயக்கப்படும் என தென்னக ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Related Tags :
Next Story