மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு


மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு
x
தினத்தந்தி 19 Jun 2022 9:33 PM GMT (Updated: 20 Jun 2022 4:11 AM GMT)

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டு உள்ளது.

சேலம்

மேட்டூர்:

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த மாதம் 24-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த தண்ணீரின் அளவு தேவைக்கு ஏற்ப குறைத்தும், அதிகமாகவும் திறக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் கடந்த 9-ந் தேதி வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக திறக்கப்பட்ட தண்ணீர், 13-ந் தேதி முதல் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது டெல்டா பாசன பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் தண்ணீர் தேவை குறைந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு நேற்று காலை முதல் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 109.89 அடியாக இருந்தது. இதனிடையே அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 5 ஆயிரத்து 894 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று வினாடிக்கு 10 ஆயிரத்து 212 கனஅடியாக அதிகரித்துள்ளது.


Next Story