மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 90 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 90 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
சேலம்
மேட்டூர்:
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 90 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இதன் காரணமாக அணையையொட்டி அமைந்துள்ள நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடி வீதமும், 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 67 ஆயிரம் கனஅடி வீதமும், கால்வாய் பாசன தேவைக்காக வினாடிக்கு 400 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
16 கண் மதகுகள் வழியாக திறக்கப்படும் தண்ணீரின் அளவு தற்போது வினாடிக்கு 67 ஆயிரம் கனஅடி குறைந்துள்ளதால் தண்ணீரின் வேகம் சற்று தணிந்து உள்ளது.
Related Tags :
Next Story