முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை ..!


முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை ..!
x

கோப்புப்படம்

தினத்தந்தி 16 July 2022 4:51 AM GMT (Updated: 16 July 2022 4:57 AM GMT)

காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

சென்னை,

கர்நாடகா மாநிலத்தில் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் கடந்த 8-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு கடந்த 2 நாட்களாக நீர்வரத்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில், காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று முழு கொள்ளளவை எட்டியுள்ளது .முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளதால் முதற்கட்டமாக 16 கண் மதகு வழியாக 25,000 கன அடி நீரும், நீர்மின் நிலையங்கள் வழியாக 25,000 கன அடி நீரும் அணையில் இருந்து திறக்கப்படுகிறது.மேட்டூர் அணை வரலாற்றில் 42வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது மேட்டூர் அணை .

அணைக்கான நீர்வரத்து 1.18 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. நீர் இருப்பு 90.92 டிஎம்சியாக உள்ளது.அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 25,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story