எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாட்டம்


எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
x

நெல்லை மாவட்டத்தி்ல் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

ராயகிரி- நடுக்கல்லூர்

தென்காசி மாவட்டம் சிவகிரி, வாசுதேவநல்லூர், ராயகிரி, தேவிபட்டணம், கடையாலுருட்டி, வீரசிகாமணி ஆகிய பகுதிகளில் அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு தென்காசி மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மூர்த்தி பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நெல்லை மாவட்டம் கோடகநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட நடுக்கல்லூரில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் கல்லூர் இ.வேலாயுதம், பாப்பாக்குடி ஒன்றிய செயலாளர் டி.கே.சுப்பிரமணியன், பாப்பாக்குடி ஒன்றிய அவைத் தலைவர் செல்லப்பா பாண்டியன், பாப்பாக்குடி ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கல்லூர் ஆ.பேச்சி துரை, கோடகநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர் முருகன் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சேரன்மாதேவி- பரப்பாடி

சேரன்மாதேவி பேரூர் கழகத்தின் சார்பில், பஸ்நிலையம் அருகில் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு நகர அ.தி.மு.க. செயலாளர் பழனிகுமார் ஏற்பாட்டில், திரளான அ.தி.மு.கவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கூனியூர் மாடசாமி, ஒன்றிய செயலாளர் மாரிசெல்வம், முன்னாள் பேரூராட்சி தலைவர் இசக்கிபாண்டியன், முன்னாள் நகர செயலாளர்கள் ஐசக் பாண்டியன், சவுந்தர் ராஜன், கூட்டுறவு வங்கி தலைவர் முருகன் நயினார், உச்சிமகாளி, நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மகாராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பரப்பாடியில் எம்.ஜி.ஆர். பாசறை சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா நடைபெற்றது. பாசறை செயலாளர் எஸ்.குமாரவேல் தலைமை தாங்கினார். கிளைச்செயலாளர் ஏ.வேல்துரை, நிர்வாகிகள் முருகேசன் யாதவ், பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாங்குநேரி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி வி.நாராயணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பாசறை நிர்வாகிகள் ரத்தினபாண்டி, கோபால், சேர்மன், நவராஜ், அதிசயமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நிர்வாகி செல்வின் நன்றி கூறினார்.



Next Story