எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிப்பு


எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிப்பு
x

சோளிங்கரில், நாளை எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவிக்கப்படுகிறது.

ராணிப்பேட்டை

அரக்கோணம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் சு.ரவி ராணிபேட்டை கிழக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.

மேலும் அவர் வெளிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியளவில் சோளிங்கர் பெருமாள் கோவிலில் இருந்து ஊர்வலமாக சென்று பஸ் நிலையம் அருகிலுள்ள எம்.ஜி.ஆர். திருஉருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மாநில, மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட பிற அணி செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், முன்னாள் ஒன்றியக்குழு, பேரூராட்சி மன்றத் தலைவர்கள் வட்ட செயலாளர்கள், கிளை செயலாளர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், நகரமன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், அனைத்து முன்னாள் பொறுப்பாளர்கள், தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story