எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிப்பு


எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிப்பு
x

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

நாமக்கல்

எம்.ஜி.ஆர். நினைவு தினம்

நாமக்கல் மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆாின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பரமத்திவேலூர் வட்டாரத்தில் எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தையொட்டி தெற்கு மற்றும் வடக்கு ஒன்றிய செயலாளர்கள் வெற்றிவேல், ரவி ஆகியோர் தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதேபோல் பரமத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரமத்தி நகர கழக செயலாளர் சுகுமார் தலைமையில் எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட வர்த்தக அணி செயலாளர் தமிழ்மணி, கவுன்சிலர்கள், கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள், கழகத் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர். பொத்தனூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகர செயலாளர் நாராயணன் தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதில் நகர அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பல்வேறு அணிகளை சேர்ந்த பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

பாண்டமங்கலம்

இதேபோல் பாண்டமங்கலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரமத்திவேலூர் தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சேகர் தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜே.பி.ரவி, வெங்கரை பேரூராட்சி தலைவர் விஜயகுமார், துணை தலைவர் ரவீந்தர், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அணிகளை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல் ஜேடர்பாளையம் மற்றும் கபிலர்மலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பரமத்திவேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சேகர் தலைமையில் கட்சியினர் எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இதில் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் ரவி, கபிலக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் வடிவேல் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

குமாரபாளையம்

குமாரபாளையம் நகர அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் ஊர்வலம் நேற்று நடைபெற்றது. பள்ளிபாளையம் பிரிவு ரோட்டில் தொடங்கிய இந்த ஊர்வலம் மெயின் ரோடு வழியாக பயணியர் மாளிகை அண்ணா சிலை சென்று முடிந்தது. பின்னர் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் கே.எஸ்.எம். பாலசுப்பிரமணி தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இதில் முன்னாள் நகர செயலாளர் எம்.எஸ்.குமணன், அவை தலைவர் எஸ். என்.பழனிச்சாமி, கவுன்சிலர் புருஷோத்தமன், முன்னாள் கவுன்சிலர்கள் திருநாவுக்கரசு, ரவி, அர்ச்சுனன், சிங்காரவேல் உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

ராசிபுரம்

அதேபோல் ராசிபுரம் நகர அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் அ.தி.மு.க.வினர் அதேபகுதியில் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் கந்தசாமி, முன்னாள் நகரச் செயலாளர் ராமசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சுரேஷ்குமார், நகர வங்கி துணைத் தலைவர் வெங்கடாசலம், நகர அவைத் தலைவர் கோபால், நகர வங்கி இயக்குனர் ஸ்ரீரங்கன், வக்கீல் பூபதி, முன்னாள் கவுன்சிலர்கள் ரமேஷ், அமல்ராஜ், ஜெகன் மற்றும் ராதா சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story