திட்டக்குடி அருகே எம்.ஜி.ஆர். சிலை சேதம் போலீசார் விசாரணை


திட்டக்குடி அருகே எம்.ஜி.ஆர். சிலை சேதம்  போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 15 Oct 2022 12:15 AM IST (Updated: 15 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

திட்டக்குடி அருகே எம்.ஜி.ஆர். சிலை சேதமடைந்தது தொடா்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடலூர்

ராமநத்தம்,

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த மருதத்தூர் பஸ் நிறுத்தம் அருகே எம்.ஜி.ஆர். சிலை அமைந்துள்ளது. அ.தி.மு.க. பொன்விழாவையொட்டி எம்.ஜி.ஆர்.சிலையை சுற்றி இருந்த கம்பி வேலிகளை கட்சி நிர்வாகிகள் அகற்றி வைத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் சிலர், எம்.ஜி.ஆர்.சிலை கையை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., நல்லூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பொன்னேரி முத்து, விருத்தாசலம் நகர செயலாளர் சந்திரகுமார், ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், கிளை நிர்வாகி செல்வராஜ் மற்றும் அ.தி.மு.க. தொண்டர்கள் அங்கு திரண்டு வந்தனர். மேலும் உடைந்த எம்.ஜி.ஆர்.சிலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க கட்சி நிர்வாகிகளுக்கு அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ. உத்தரவிட்டார்.

மேலும் ஆவினங்குடி போலீசாரும் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இருப்பினும் சிலையை உடைத்தவர்கள் யார்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திட்டக்குடி பகுதியில் எம்.ஜி.ஆர். சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story