உலகத்தமிழர்களின் நெஞ்சங்களில் இன்றும் எம்.ஜி.ஆர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் - சசிகலா
உலகத்தமிழர்களின் நெஞ்சங்களில் இன்றும் எம்.ஜி.ஆர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என சசிகலா கூறியுள்ளார்.
சென்னை,
சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக மக்கள் நலனுக்காகவும், ஏழை-எளிய மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாறிடவும், எண்ணற்ற திட்டங்களை வகுத்து கொடுத்த சத்துணவு தந்த சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர், உலகத்தமிழர்களின் நெஞ்சங்களில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
எம்.ஜி.ஆரின் கொள்கைகளை மனதில் வைத்து, அவர் காட்டிய பாதையில் தொடர்ந்து பயணிக்க அவரது 35-வது ஆண்டு நினைவுநாளான வருகிற 24-ந்தேதி (சனிக்கிழமை) சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் தொண்டர்களுடன் இணைந்து மலரஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்க உள்ளோம்.
எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தங்களான அன்பு உடன்பிறப்புகளும், அவரது வழியில் பயணிக்கும் தொண்டர்களும் இதில் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story