எம்.ஜி.ஆர். சிலை அருகே திடீர் தீ


எம்.ஜி.ஆர். சிலை அருகே திடீர் தீ
x

எம்.ஜி.ஆர். சிலை அருகே திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

விருதுநகர்


விருதுநகர்-சாத்தூர் ரோடு சந்திப்பில் எம்.ஜி.ஆர். சிலை அருகே ஜெய்சங்கர் என்பவருக்கு சொந்தமான நிறுவனம் உள்ளது. இங்கு பழைய பொருட்கள் கொள்முதல் செய்து குவித்து வைக்கப்பட்டு இருந்தது. நேற்று அதிகாலை திடீரென அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த பழைய பொருட்களில் தீப்பிடித்தது. இதுகுறித்து தகவலறிந்த விருதுநகர் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். தீ விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து விருதுநகர் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Related Tags :
Next Story