கரும்பு சாகுபடியில் நுண்ணீர் பாசன செயல்விளக்க பயிற்சி


கரும்பு சாகுபடியில் நுண்ணீர் பாசன செயல்விளக்க பயிற்சி
x

கரும்பு சாகுபடியில் நுண்ணீர் பாசன செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் பொதுத்துறை சர்க்கரை ஆலையின் புதுவேட்டக்குடி கரும்பு கோட்டத்தில் உள்ள நல்லறிக்கை கிராமத்தில் கரும்பு சாகுபடியில் நுண்ணீர் பாசனம் நிறுவுதல் மற்றும் பராமரித்தல் குறித்தும், கரும்பை தாக்கும் பூச்சிகளை இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் உயிரியல் பயிர் பாதுகாப்பு முறை குறித்தும் செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. பெரம்பலூர் சர்க்கரை ஆலையின் தலைமை நிர்வாகி ரமேஷ் அறிவுரையின்பேரில் கரும்பு அபிவிருத்தி அலுவலர் ஆனந்தன் தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார். தனியார் நிறுவன அதிகாரி பிரபாகரன், கரும்பு பயிரை தாக்கும் பூச்சிகள், அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளித்தார். இதில் தனியார் சொட்டுநீர் பாசன நிறுவன அதிகாரி சக்திவேல், திட்டங்கள் மூலம் கிடைக்கும் அரசு மானியங்கள் குறித்து பயிற்சி அளித்தார். முடிவில் கரும்பு கோட்ட அலுவலர் சுரேஷ் நன்றி கூறினார்.


Next Story