நடுவட்டத்தில் பசுமை இயக்கத் திட்டம்:பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மரக்கன்று நட்டார்

நடுவட்டத்தில் பசுமை இயக்கத் திட்டம்:பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மரக்கன்று நட்டார்
x
தினத்தந்தி 25 Sep 2022 6:45 PM GMT (Updated: 25 Sep 2022 6:46 PM GMT)

நடுவட்டத்தில் பசுமை இயக்கத் திட்டம்:பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மரக்கன்று நட்டார்

நீலகிரி

கூடலூர்

தமிழ்நாடு பசுமை இயக்க திட்டம் மாநிலம் முழுவதும் முதற்கட்டமாக சுமார் 2 ½ கோடி மரக்கன்றுகள் நடும் பணியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து அனைத்து இடங்களிலும் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராஹீம் ஷா நடுவட்டம் பேரூராட்சி பகுதியில் மரக்கன்றுகள் நட்டார். மேலும் பொதுமக்களுக்கு முதற்கட்டமாக 200 மரக்கன்றுகளை வழங்கினார். பின்னர் பேரூராட்சி பகுதியில் ஆய்வு நடத்தி நட்ட மரக்கன்றுகளை தொடர்ந்து பராமரிக்க வேண்டுமென பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் பிரதீப் குமார், துணைத் தலைவர் துளசி உள்பட கவுன்சிலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story