சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சத்துணவு திட்ட ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை
சத்துணவு திட்ட ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சம்பத் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பழனி, அன்பழகன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்பட வேண்டும். ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்கிட வேண்டும். காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் ஏராளமான சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story