மிலாது நபி விழா


மிலாது நபி விழா
x

மேலப்பாளையத்தில் மிலாது நபி விழா நடைபெற்றது.

திருநெல்வேலி

நெல்லை மேலப்பாளையம் பஜார் திடலில் மிலாது நபியையொட்டி புகைப்பட கண்காட்சி, பாரம்பரிய சிலம்பாட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நெல்லை மாவட்ட மிலாது கமிட்டி அமைப்பாளர் வி.எஸ்.டி. அமானுல்லா தலைமை தாங்கினார்.

மாலையில், இஸ்மாயில் தங்கள் தைக்கா வாய்க்கால் பாலம் அருகே ஊர்வலம் தொடங்கி புதுமனை குத்பா பள்ளிவாசல் அருகில் பஜார் திடலில் நிறைவு பெற்றது. அங்கு கட்டுரை, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இரவில் உத்தம திருநபி உதய தின விழா மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story