மழைமுத்து மாரியம்மனுக்கு பால் அபிஷேகம்
வேளாங்கண்ணி அருகே மழைமுத்து மாரியம்மனுக்கு பால் அபிஷேகம்
நாகப்பட்டினம்
வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணியை அடுத்த விழுந்தமாவடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற மழைமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 501 பால்குட ஊர்வலம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் காப்பு கட்டி, விரதம் இருந்து பால்குடம் எடுத்தனர். இந்த பால்குட ஊர்வலமானது கன்னித்தோப்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்டு 2 கிலோமீட்டர் தூரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மழைமுத்து மாரியம்மன் கோவிலை வந்தடைந்தனர். அதை தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
Related Tags :
Next Story